1, அறிமுகம்
தமிழகத்தின் காவல் தெய்வங்கள் என்றாலே முதலில் நாம் அனைவரின் நினைவுக்கு வருவது அய்யனார் தான்
அய்யனாரை பற்றி சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த http://kavaldeivamayyanar.blogspot.in/2013/02/3_16.html வலைத்தளத்தில்(Blog-ல்) எழுத தொடங்கினேன் சில காரணங்களால் இந்த வலைத்தளத்தில் தொடர முடியவில்லை அதனால் புதிய பதிவு ஒன்றை தொடங்கியுள்ளேன்
இந்த வலை தளத்தில் நான் புத்தகங்களில் படித்தது வாய்வழியாக கேட்டகதைகள் ஆய்வாளர்கள் கூறும் கருத்து மற்றும் wikipedia-லிருந்து சேகரித்த தவல்கள் இவையனைத்தையும் ஒருங்கினைத்து உங்கள் முன் சமர்பிக்கிறேன்
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே இந்த அய்யனாரை பற்றிய வரலாற்று தொகுப்பை எழுத முயற்சித்து வருகிறேன் தகவல் தெரிந்த அளவுக்கு அதை எளிய நடையில் எழுத்தத் தெரியவில்லை இருந்தாலும் அய்யனின் அருளால் தற்போது எனக்கு தெரிந்த நடையில் எழுதுகிரேன் தவறேதும் இருந்தால் பக்தகோடிகள் வலைதள நண்பர்கள் பொறுத்து அருளவும் ,
நான் இந்த வலை தளத்தில் குறிப்பாக அய்யனாரை பற்றி எழுத காரணம் என் வீட்டில் பெரியவர்கள் என் சிறுவயதுமுதலே அய்யனாரின் கதைகளை ஆழமாக சொல்லி சொல்லி அவர் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை விதைத்துள்ளனர் அது மட்டுமல்ல என் குலதெய்வம் கரையடி காத்த அய்யனாரின் பூசை பொறுப்பும் பூசை பொருள்களும் எங்கள் வீட்டு பொறுப்பில் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்
பொதுவாக சிறுவயதில் பெரியவர்களிடம் கதை கேட்டால் எதாவது விலங்குகள் கதை அல்லது பாட்டி வடை சுட்ட கதை ( அ ) இராமாயணம் மகாபாரதம் கதைகள் இதைத்தான் சொல்வார்கள் ஆனால் நான் என் சிறுவயதில் கதை என்று கேட்டாலே பெரும்பாலும் என் குலதெய்வம் அய்யனாரை பற்றிய கதைகளைதான் கூறுவார்கள் அதனாலோ என்னவோ எனக்கு மற்ற அனைத்து பண்டிகயைவிட மகாசிவராத்திரிதான் முக்கியமானதகவும் மகிழ்வானதாகவும் உள்ளது
தை பொங்கல் வந்து விட்டால் போதும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை காரணம் பொங்கல் பண்டிகையல்ல அடுத்து மாசி மாதம் வரும் மகாசிவராத்திரிதான் தை மாதம் தொடக்கத்தில் இருந்தே எங்கள் குலதெய்வத்தை சார்ந்த உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி மாசி படப்பு (அல்லது) மாசி களறி திருவிழா என்று அழைக்கபடும் மகாசிவராத்திரியன்று எங்கள் குலதெய்வம் கரையடி காத்த அய்யனாரை வழிபடுவது பற்றி பேசத் தொடங்கிவிடுவார்கள் இந்த மூன்று நாள் திருவிழாதான் ஒவ்வொரு வருடமும் அளப்பரிய மகிழ்ச்சியை அளிக்கிறது எனக்கு
சிறுவயதில் நான் கேட்ட இந்த கதைகள் தான் அய்யனாரை பற்றிய இந்த தேடலுக்கு காரணம்
அய்யனாரை பற்றி மட்டுமல்ல அவரது பரிவார தெய்வங்களை பற்றியும் காண்போம்
(அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே "அய்யனே" இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே) இது ஈசனுக்கு மட்டும் தான் பொருந்தும என்ன?.
அய்யனே சரணம் அய்யனே சரணம் அய்யனே சரணம்

Comments
Post a Comment