5,மகா காளர் என்கிற பூதம் தான் கருப்பசாமியா ?
காவலுக்குக் கருப்பர்
அய்யனார் பரிவார தெய்வங்களில் ஒன்றன கருப்பர் காவல் தெய்வமாவார். இவர் கையில் அரிவாளுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி, நாய் உடன் வர, ஊரை வலம் வந்து காவல் செய்வதாக நம்பப்படுகிறது
அகிலமே வணங்கும் அய்யனார்
அய்யனார் என்பவர் எல்லோருக்கும் தலைவன் ஆவார். இதனால் அனைத்து சமூகத்தினரும் சாதிவேறுபாடு இல்லாமல் ஐயனாரைக் குலதெய்வமாக வணங்கி வழிபடுகின்றனர். இவ்வுலகம் முழுமையும் இவரது தலைமைக்குக் கட்டுப்பட்டே நடக்கிறது. பெரும்பாலான கோவில்களில் அய்யனாரும், கருப்பரும் இணைந்தோ, தனித்தனியாகவோ காணப்படுகின்றனர். இருவருக்கு என்ன தொடர்பு இருக்க முடியும் என்பது ஆராயத் தக்கது.
புராணத்தில் வரும் சாஸ்தா, அய்யனார் பற்றிய செய்திகளைப் பார்ப்போம். கந்த புராணத்தில் தான் முதன் முதலில் சாஸ்தா பற்றிய செய்திகள் வருகின்றன. கந்தபுராணத்தில் மகாசாஸ்தா படலத்தில் இந்திராணிக்குக் காவலாக மகா காளர் என்னும் தன் தளபதியை சாஸ்தா நியமித்ததாக கந்தபுராணம் கூறுகிறது.
இந்திராணியை, அஜமுகி தாக்க வந்தபோது இந்திராணியை காக்க வேண்டி அஜமுகி கையை மகா காளர் வெட்டி வீழ்த்தியதாக
கந்தபுராணம் கூறுகிறது
மேற்கொண்ட தகவல்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது அந்தப் பூதம் தான் பிற்காலத்தில் கருப்பசாமியாக மாறி இருக்க வேண்டும் என்றும் அந்த பூதத்தை ஏவலாகக் கொண்ட, யானை வாகனம் உடைய இந்திரன் தான் பிற்காலத்தில் அய்யனாராக வழிபாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருத இடமுள்ளது. அதாவது இந்திர வழிபாடே அய்யனார் வழிபாடாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என்று கருத இடமுள்ளது
Comments
Post a Comment