3, அய்யனாரா? ஐயனாரா?
"சொல்லுக சொல்லின் பொருள் உணர்ந்து" சிலர் ஐயனார் என்று எழுதுகின்றனர். ஆனால், சிலர் அய்யனார் என்றும் எழுதுகின்றனர்
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி" தமிழ்க்குடியாகும்.
உயிர் உடல் ஆயுதம் இவற்றோடு தோன்றிய தமிழர் தாம் பேசும் தமிழ் மொழியிலும் உயிர் எழுத்துக்களையும். மெய்யெழுத்துக்களையும் ஆயுத எழுத்துக்களையும் உருவாக்கிச் சங்கம் வைத்து ஆராய்ந்து தமிழ் மொழியை வளர்த்துள்ளனர்,
தமிழில் எழுத்துக்களை குறில் எழுத்துக்கள் என்றும் நெடில் எழுத்துக்கள் என்றும் ஒற்றெழுத்துக்கள் என்றும் பிரித்துள்ளனர். குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். மெய்யெழுத்துக்கள் அரைமாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். எனவே தமிழில் ஒவ்வொரு சொல்லும் மிகவும் சிறப்புப் பெற்றனவாகத் திகழ்கின்றன. உதாரணமாக "மகன்" என்று சொல்லுக்கும் "மகான்" என்ற சொல்லுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. பகவனுக்கும் பகவானுக்கும் வேறுபாடு உண்டு. இவ்வாறாகப் பல உதாரணங்களைக் கூறலாம், எனவே சொல்லில் உள்ள எழுத்துக்களின் ஒலி அளவைக்கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ பொருள் மாறுபடும்.
ஐயனார் என்ற சொல்லில் "ஐ" என்பது நெடில் எழுத்தாகும் இரண்டு மாத்திரை அளவு உள்ளது. ஆனால், "அ" என்பது குறில் ஒரு மாத்திரை அளவு உள்ள தாகும். "ய்" என்பது மெய் யெழுத்து அரை மாத்திரை அளவு உள்ளதாகும், எனவே "அய்" என்று எழுதினால் ஒன்றரை மாத்திரை அளவு தான் ஒலிக்கும்.
ஐ நெடில் = 2 அளவு
அ குறில் = 1 அளவு
ய் ஒற்று = ½ அளவு
அய் = 1+½ = 1 ½ அளவு
"ஐ" என்றால் தமிழில் தலைவன் என்று பொருள். "ஐயன்" என்றால் தலைவனானவன் என்று பொருள். "அய்" என்றால் பொருள் ஏதும் இல்லை. எனவே நாம் வணங்கும் தெய்வத்தின் பெயரை நாமே குறைத்து ஒலிப்பதும் கூறுவதும் எழுதுவதும் தவறாகும். எனவே "ஐயனார்" என்றே கூறவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும். இதேபோல் "ஐயா" என்றுதான் எழுதவேண்டும். "அய்யா" என்று எழுதக்கூடாது. "ஐயா" என்றால் தலைவர் என்று பொருள். அய்யா என்றால் பொருள் ஏதும் இல்லை என்று இது "ஆய்வாளர்கள்" கூறும் கருத்து
என்னை பொறுத்த வரை அய்யனார் என்பதும் சரிதான் ஏனென்றால் "அ" தமிழின் முதல் எழுத்து இதனால் தான் திருவள்ளுவர் திருக்குறளில் "அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என்று முதல் பாடலை தொடங்குகிறார் எப்படி பார்த்தாலும் அகர வரிசையில் "அ" தான் முதன்மை எனவே அய்யனார் என்றாலும் முதன்மையானவர் என்றே பொருள்
தமிழின் முதல் எழுத்தான "அ" -வின் முக்கியத்துவம் பற்றி திரு.வாரியார் சுவாமிகள் கூறும் விளக்கத்தை கேளுங்கள்
https://www.facebook.com/siva.mageshwaran?hc_location=friend_browser&fref=pymk#!/photo.php?v=420846308047953&set=vb.100003677633472&type=2&theater
இதன் காரணமாகவோ என்னவோ அய்யனார் இருக்கும் இடம் யாவும் தலமை தெய்வமாகவே இருக்கிறார்
சில இடங்களில் அய்யனார் தலமை வகிக்கவில்லை என்றால் சிவன் அல்லது விஷ்ணு தலமைத் தெய்வமாக இருகின்றனர் அல்லது அய்யனார் தலைமை இல்லாததுக்கு வேறு ஏதேனும் கதை இருக்கிறது அல்லது முதல் பூஜை அய்யனாருக்கு செய்கிறார்கள்
உதரணத்துக்கு
மடப்புரம் காளி கோவில் இது உண்மையில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் காளி அய்யனாரிடம் அடைக்கலமாக வந்து நின்றதால் இது அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் என பெயர் பெற்றது காளி வந்து தஞ்சம் அடைவதற்கு முன்பே அங்கு அய்யனார் கோவில் இருந்திருக்க வேண்டும் ஆனால் தற்போது மாறி அங்கு காளி தான் பிரதான தெய்வம்மாகிவிட்டால் ஆனாலும் அய்யனார் தான் தலைமை தெய்வமாகவும் இருக்கிறார் முதல் பூஜை அய்யனாருக்குதான்
இதேபோல்தான் கோச்சடை அய்யனார் கோவில் ஆனால் இன்று அறியப்படுவது கோச்சடை முத்தையா கோவில்
அடைக்கலம் காத்த அய்யனார் : மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தி நின்ற கோலத்தில் காணப்படுகிறார். வலது கை நீண்ட சுதையின் மீது அமைந்து நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்
Comments
Post a Comment