2, தோற்றம்
தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க வேண்டியிருந்தது. இதற்காகப் பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், மகாவிஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார். அவரது தோற்றத்தைக் கண்டவர்களின் மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. மோகினியானவள் ரிஷிகள் வேள்விக ள் செய்யும் இடத்திற்குச் சென்று அவர்களின் மனத்தை அலைபாயச் செய்தார். இதனால் வேள்வி தடைபட்டது ஆனால், பிட்சாடனர் மோகினியின் உருவத்தில் காமமுற்று அவளை அடையவேண்டி விரட்டிச் சென்றார். அப்போது காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் பிறந்தவர் அய்யனார் அல்லது சாஸ்தா ஆவார். அய்யனார் மாசிமாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார் என்றும்.
பிட்சாடனர் மோகினியின் உருவத்தில் காமமுற்று அவளை அடையவேண்டி விரட்டிச் சென்ற. போது காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் பிட்சாடனர் மோகினியின் கையில் பிறந்தவர் இதனால் கையனார் என்று பெயர் இந்த பெயர் மறுவி அய்யனார் என்று அழைக்கப்படுவதாகவும் ஒரு கதை உண்டு
வடிவம்
அய்யனார் சர்வேசுவரனைப் போன்ற தோற்றம் உடையவராய் இருப்பார். கிழக்குத்திசை நோக்கி அமர்ந்திருப்பார். மார்பில் பூணுல் அணிந்திருப்பார். இளைஞரைப்போன்றவர். விரிந்து பரந்த முகத்தையும் மார்பையும் உடையவர். தங்கநிறம் அல்லது சிவப்பு நிறமானவர். கீரீடம் அணிந்திருப்பார். கருத்த அடர்த்தியான சுருண்ட முடியை உடையவர். வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார்,மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். சந்தனம் பூசியிருப்பார். பீடத்தின் மீது நன்கு நிமிர்ந்து உட்கார்ந்திருப்பார்.
வலதுகையில் தண்டம் அல்லது தடி சில இடங்களில் மலர் அல்லது மலர் செண்டு, பிரம்பு, நாகம், வைத்திருப்பார் இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார்.
வலதுகையில் சில கோவில்கள் இதற்கு விளக்கு வில்லயுதமுடைய அய்யனார் கோவிலில் வில்லயுதமும், கற்குவேல் அய்யனார் கோவிலில் வேலாயுதமும் வைத்திருப்பார்.
எங்கள் குலதெய்வம் கரையடி காத்த அய்யனார் வலதுகையில் ஆயுதம் ஏந்தாமல் அபயஹஸ்தத்துடன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு பெறும்பாலும் வேறு எங்கும் அபயஹஸ்தத்துடன் காணமுடியாது
யானையையும் வெள்ளைக்குதிரையையும் வாகனமாக உடையவர்.
தேவியர் இருவர்
சிறப்பான காரணகாரியங்கள் கருதி சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல், அய்யனார் தனித்தும் இருக்கிறார். இவ்வாறாகத் தனித்து இருக்கும் அய்யனார் பாலசாஸ்தா என்று அழைக்கின்றனர்.பொதுவாக, அய்யனாருக்குப் பூர்ணாதேவி, புஸ்கலாதேவி என இரண்டு தேவியர் உள்ளனர், அய்யனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர். பூலோகத்தில் அவதரித்தவர். எனவே தேவலோகத்தைச் சேர்ந்த புஸ்கலாதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும் துணைவியராக உள்ளனர்.
வடிவம்
இவர்களது தலையானது ஐயனாரின் தோள்ப்பட்டை உயரத்தில் இருக்கும். அய்யனாரின் அருகில் உள்ள கையில் மலரைப் பிடித்தபடியும், அய்யனாரின் அருகில் உள்ள காலை மடித்துப் பீடத்தின் மீது வைத்துக் கொண்டு மற்றொரு காலைக் கீழே தொங்கவிட்டபடியும் அமர்ந்திருப்பர்.
புஷ்கலை என்றால் பூவைப்போன்ற பண்புடையவள் என்று பொருள். பூ என்று பொதுவில் சொன்னால் அது தாமரையைக் குறிக்கும். எனவே புஷ்கலை என்றால் தாமரை மலரைப்போன்றவள். மலர்ந்த முகமுடையவள், பரந்த எண்ணமுடையவள், மணம் நிறைந்தவள்.
பூரணம் என்றால் நிறைவு, பௌர்ணமி என்று பொருள் எனவே, பூரணை என்றால் மனநிறைவானவள் முழுமதி போன்றவள் என்று பொருளாகும்.
Comments
Post a Comment