6,அய்யனார்  வழிபாடு

                       
                       சென்னையை  ஒட்டிய  பகுதிகளை தவிர்த்து தமிழகம் முழுவதும்  அய்யனார்  வழிபாடு  காணபடுகிறது அதிலும் குறிப்பாக தென் தமிழகத்தில் அதிகம் காணபடுகிறது  குலதெய்வ வழிபாடு தவிர்த்து சில ஆகம  விதிக்குட்பட்ட  பெரிய  கோவில்களிலும் அய்யனாருக்கு  தனிச் சன்னதி  உள்ளது
              எடுத்துகாட்டாக  குற்றலநாதர்  கோவிலையும்  தஞ்சை பெரிய கோவிலையும்  சொல்லாம்  அதுமட்டுமல்ல  திருகழுகுன்றம்  வேதகிரீஸ்வர் கோவில்  பிரகாரதில்  உள்ள  தூணில்  புலிமேல் அமர்ந்தவாறு காட்சி தருகிறார்
திருகழுகுன்றம்  வேதகிரீஸ்வர் கோவில்  பிரகாரதில்  உள்ள  தூணில்  புலிமேல் அமர்ந்தவாறு காட்சி தருகிறார்
புலிமேல்  காட்சி
இதேபோல்  திருவெற்றியூர்  வடிவுடையம்மன்  கோவில் பிரகாரதில் தூணில்  பூரணை  புஷ்கலையுடன்  அருள்பாலிக்கிறார்  இதற்கு எதிர்  தூணில்  குதிரை மீது அமர்ந்து  அரிவாளை  ஓங்கியவாறு கருபசாமி காட்சி தருகிறார்  இது மட்டுமல்ல  இன்னும் பல பெரிய கோவில்களில் அய்யனாருக்கு சன்னதி உள்ளது

திருப்பட்டூர் (திருச்சி)

         இங்கு தான் மிக பிரமாண்டமான கற்கோயிலாக அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது. மண்ணால் செய்யப்பட்ட இந்த ஆலயத்தை கற்றளியாக மாற்றியது   ராஜேந்திரசோழ மன்னன். மூன்று நிலை ராஜகோபுரம், அழகிய யானையின் திருமேனி, பலிபீடம்,  நட்சத்திர வடிவிலான யாகசாலை மண்டபம்,  திருச்சுற்று மாளிகை, அர்த்த மண்டபம்  என பிரமாண்டமாக திகழ்கிறது.
                              வெகு காலத்திற்கு முன்பே தமிழகத்தில் அய்யனார் வழிபாடு இருந்து வந்தாலும், கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் அய்யனாருக்கு கோயில் அமைக்க முதலாம் ராஜராஜ சோழன் ஏற்பாடு செய்திருக்கிறான்.
கருவறையில் கழுத்து, மார்பு, விரல்கள், கணுக்கைகள், தோள்பட்டைகள் ஆகியவற்றில் ருத்திராட்சங்கள் துலங்க, வலது கையில் செண்டும், இடது கையில் சின்னதொரு சுவடியும் கொண்டு அழகுறக் காட்சி தருகிறார்

கற்குவேல் அய்யனார்
                 கற்குவேல் அய்யனார் திருக்கோயில் காயாமொழி, தூத்துக்குடி மாவட்டம். பக்தர்கள் மாவிளக்கு, முளைப்பாடி, தீச்சட்டி எடுத்தல், பூ மிதித்தல் என நேர்த்திகடன் செலுத்துகின்றனர்

கனடாவில் அய்யனார்
                 இந்தியாவிலிருந்து வெளி நாடுகளில் போய் குடியேறியவர்களும் இப்பொது அங்குள்ள கோவில்களில் அய்யனாருக்கு  தனிச்சன்னதி  அமைத்து வழிபடுகிறார்கள்  அதற்கு சான்றாக இதோ கனடாவில் உள்ள அய்யனார் கோவிலை பாருங்கள்
கனடாவில்  அய்யனார் கோயில்
கனடாவில் அய்யனார்


Comments

Popular posts from this blog