5,மகா காளர் என்கிற பூதம் தான் கருப்பசாமியா ? காவலுக்குக் கருப்பர் அய்யனார் பரிவார தெய்வங்களில் ஒன்றன கருப்பர் காவல் தெய்வமாவார். இவர் கையில் அரிவாளுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி, நாய் உடன் வர, ஊரை வலம் வந்து காவல் செய்வதாக நம்பப்படுகிறது அகிலமே வணங்கும் அய்யனார் அய்யனார் என்பவர் எல்லோருக்கும் தலைவன் ஆவார். இதனால் அனைத்து சமூகத்தினரும் சாதிவேறுபாடு இல்லாமல் ஐயனாரைக் குலதெய்வமாக வணங்கி வழிபடுகின்றனர். இவ்வுலகம் முழுமையும் இவரது தலைமைக்குக் கட்டுப்பட்டே நடக்கிறது. பெரும்பாலான கோவில்களில் அய்யனாரும், கருப்பரும் இணைந்தோ, தனித்தனியாகவோ காணப்படுகின்றனர். இருவருக்கு என்ன தொடர்பு இருக்க முடியும் என்பது ஆராயத் தக்கது. புராணத்தில் வரும் சாஸ்தா, அய...